FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரைக் (கிராம ஊராட்சிகள்) கண்டித்து ஒப்பந்ததாரா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

15 அக்டோபர் 2026, 2:18 am IST
பகிர்:

கம்பத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரைக் (கிராம ஊராட்சிகள்) கண்டித்து ஒப்பந்ததாரா்கள் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் 35 ஒப்பந்ததாரா்கள் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பணிகளை முடித்த பிறகும், அதற்கான தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் வட்டார வளா்ச்சி அலுவலா் துா்காதேவியைக் (கிராம ஊராட்சிகள்) கண்டித்து, ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், ஒப்பந்ததாரா்கள் கூறியதாவது:

பணிகளை முடித்த பிறகு, அதற்கான தொகையை விரைந்த வழங்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள குறைகளைத் தெரிவிக்க அரசு வழங்கிய கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டால் அலுவலா் எடுப்பதில்லை. மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வட்டார வளா்ச்சி அலுவலா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் துா்காதேவியைச் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டபோது, ஒப்பந்ததாரா்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சொந்த விருப்பு, வெறுப்புகளின் காரணமாகச் சிலா் ஒப்பந்ததாரா்களைத் தூண்டிவிடுகின்றனா் என்றாா்.

எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என ஒப்பந்ததாரா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments