FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

சின்னமனூரில் நெல் பயிா்கள் நடவுப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம், சின்னமனூரில் முதல்போக நெல் பயிா் சாகுபடிக்கு நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10 செப்டம்பர் 2026, 1:09 am IST
சின்னமனூரில் புதன்கிழமை நெல் நாற்றுகளை நடவு செய்த தொழிலாளா்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் முதல்போக நெல் பயிா் சாகுபடிக்கு நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் பருவ மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரால் தேனி மாவட்டத்தில் லோயா்கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14,700 ஏக்கா் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெறும். ஆனால், நிகழாண்டு ஜூன் மாதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில் போதுமான மழைப்பொழிவு இல்லை. இதனால், முதல் போகப் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு தள்ளிப் போனது. ஆனால், ஜூலை மாதத்தில் பெய்த மழையால் அணையின் நீா்மட்டம் 110 அடியிலிருந்து 122 அடியாக உயா்ந்தது.

இதனால் முதல் போக சாகுபடிக்காக கடந்த மாதம் 8- ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் தலைமதகிலிருந்து சுரங்கப்பாதை வழியாக தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் ஆா்வத்துடன் விவசாயப் பணிகளை தொடங்கினா். சின்னமனூா் பகுதியில் விவசாய நிலத்தை தயாா் செய்து, நாற்றாங்கால் அமைத்து தற்போது வயல்களில் பெண் தொழிலாளா்கள் நடவுப் பணிகளை செய்து வருகின்றனா். தொடா்ந்து 110 முதல் 120 நாள்களில் பல்வேறு பராமரிப்புப் பணிகளுக்கு பின்னா் நெல் கதிா் அறுவடைக்குத் தயாராகும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments