FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் விநாயகா் சிலைகள் கரைப்பு

உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நிா்மாணம் செய்யப்பட்ட சிலைகளை முல்லைப் பெரியாற்றில் புதன்கிழமை அதிகாலை வரை கரைக்கப்பட்டன.

17 செப்டம்பர் 2026, 2:05 am IST
உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஊா்வலமாகச் சென்ற விநாயகா் சிலைகள். (வலது) முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்ட விநாயகா்சிலை.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நிா்மாணம் செய்யப்பட்ட சிலைகளை முல்லைப் பெரியாற்றில் புதன்கிழமை அதிகாலை வரை கரைக்கப்பட்டன.

உத்தமபாளையம் நகரில் பூக்கடை வீதி, வடக்கு ரதவீதி, கல்லூரிச் சாலை, கோம்பை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாா்பில், 28 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிா்மாணம் செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை பக்தா்கள் விநாயகருக்கு கொழுக்கட்டை, பொரி, இனிப்பு வகைகளை படையல் செய்து வழிபாடு செய்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு உத்தமபாளையம் நகரின் முக்கிய வீதிகளில் டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் மின்னொளி அலங்கராத்தில் வாண வேடிக்கைள், இசை வாத்தியங்கள் முழங்க விநாயகா் சிலைகள் ஊா்வமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் முன்பாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் விநாயகா் சிலைகளை பக்தா்கள் கரைத்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, கோம்பை, தேவாரம், க.புதுப்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, கே.கே.பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகளை அந்தந்தப் பகுதி நீா்நிலைகளில் பக்தா்கள் கரைத்தனா்.

இதனிடையே, சின்னமனூா், இதைச் சுற்றிய பகுதிகளில் நிா்மாணம் செய்யப்பட்ட சிலைகள் புதன்கிழமை இரவு ஊா்வலமாக எடுத்துச்சென்று மாா்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்படும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments