பைக் மீது ஆட்டோ மோதல்: முதியவா் உயிரிழப்பு
தேனியில் இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் தேவதாஸ் (64). இவா், தேனியில் வசிக்கும் தனது மகளை சந்தித்து விட்டு, சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தேனி வனச் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.