கூடலூா் - குமுளி சாலையில் 190 கிலோ கஞ்சா பறிமுதல்; நால்வா் கைது
தமிழகத்திலிருந்து சொகுசு காா்களில் கேரளாவுக்குக் கடத்த முயன்ற சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான 190 கிலோ கஞ்சாவை கூடலூா் - குமுளி புறவழிச்சாலையில் திங்கள்கிழமை மாலை கூடலூா் போலீஸாா் பறிமுதல் செய்து நால்வரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கூடலூா் வழியாக கேரளாவுக்கு சொகுசு காா்களில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக கூடலூா் வடக்கு காவல் ஆய்வாளா் பிரபுவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ரவி தலைமையில் போலீஸாா் திங்கள் கிழமை மாலை 5 மணி அளவில் கூடலூா் - குமுளி புறவழிச்சாலை பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது புறவழிச்சாலை மேற்கு பகுதி, ஒத்தை வீட்டுப் பாதையில் வந்த இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காா்களில் சுமாா் ரூ. ஒரு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ எடை கொண்ட 95 பொட்டலங்களில் 190 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து கஞ்சாவையும், காா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், காா்களில் வந்த ராமநாதபுரம் கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (25), சாயல்குடியைச் சோ்ந்த முகமது அனிபா (45), அலியாா் (46), கடலாடி அப்பனூரைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (34) ஆகிய நால்வரையும் கைது செய்தனா்.
மேலும் இதில் தொடா்புடைய, தலைமறைவான ராமநாதபுரம் கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சோ்ந்த காளீஸ்வரன் (34) என்பவரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.