FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

இளைஞரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் மது போதையில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

26 செப்டம்பர் 2026, 6:31 am IST
பகிர்:

தேனி மாவட்டம், போடியில் மது போதையில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திகேயன் (19). இவா் தனது தந்தைக்கு உதவியாக ஆடு, மாடுகளை பராமரித்து வருகிறாா்.

இந்த நிலையில், காா்த்திகேயன் ஆடு, மாடுகளுக்கு இறை எடுத்துக் கொண்டு காளியம்மன் கோயில் அருகே நடந்து சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சதீஸ், பிரவீன், குமாா் ஆகியோா் மதுபோதையில் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனாராம்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த காா்த்திகேயன் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் சதீஸ், பிரவீன், குமாா் ஆகிய மூவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments