FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

போக்சோ வழக்கில் விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் கைதான விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

26 செப்டம்பர் 2026, 6:33 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போக்சோ வழக்கில் கைதான விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த விவசாயி சுருளிமுத்து (51). கடந்தாண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகாரின் பேரில், இவரை பெரியகுளம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழில் குற்றஞ்சாட்டப்பட்ட சுருளிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments