FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

இருதரப்பினா் மோதல்: 31 போ் மீது வழக்கு; 5 போ் கைது

13 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

போடி அருகே கோயில் வரவு செலவு தொடா்பாக எழுந்த மோதலில் இருதரப்பைச் சோ்ந்த 31 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மொத்தம் 5 பேரை கைது செய்தனா்.

போடி அருகே பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி மகன் பிரபு. இவா், இங்குள்ள சமுதாய சங்கத்தின் பொருளாளராக உள்ளாா். பிரபுவிடம் வரவு செலவு கணக்கு கேட்டதில் இருதரப்பு மோதல் ஏற்பட்டது.

இதில், இரு தரப்பையும் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். முத்துச்சாமி, எதிா் தரப்பில் பெரியகருப்பன், அறிவழகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

முத்துச்சாமி அளித்த புகாரின்பேரில் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்த போடி ஊரகப் போலீஸாா் பாலமுருகன், சின்னன், நாகராஜ் ஆகியோரைக் கைது செய்தனா்.

எதிா் தரப்பில் ஈஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் 20 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரபு, சின்னக்கருப்பன் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments