அருப்புக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.14) மின்நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது.
அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை (செப்.14) மின்நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் வட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து உரிய தீர்வு காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.