முன்னாள் துணை வேந்தர் ஜவஹர் நேசன் தலைமையில் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்: சிபிஐ(எம்) ஆதரவு
முன்னாள் துணை வேந்தர் ஜவஹர் நேசன் தலைமையில் கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து...
தமிழ்நாடு முழுவதும் தமிழக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக பொது நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்திருப்பதாவது:
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், சமூக நல ஆர்வமுள்ள குடிமக்கள் ஆகியோர் இணைந்து மேனாள் துணைவேந்தர் திரு வெ. ஜவஹர் நேசன் அவர்கள் தலைமையில் இயங்கும் "குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி ஜனநாயக வாழ்வுரிமைகளுக்கான இயக்கம்" சார்பில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெற வேண்டும், அனைவருக்கும் சமமான தரமான பொதுக் கல்வி வழங்கிட வேண்டும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு 2026 செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு முழுவதும் தமிழக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக பொது நோக்குடன் மேற்கொள்ளப்படும் இந்த சைக்கிள் பிரச்சார பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதோடு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வி குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்கு பொதுமக்கள் மற்றும் கல்வியின் மீது அக்கறையுள்ள அமைப்புகள் பேராதரவு அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Awareness campaign on education led by former Vice-Chancellor Jawahar Nesan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.