மத்தாப்பு ஆலை தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மத்தாப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மத்தாப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சிவகாசியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவருக்கு சொந்தமான மத்தாப்பு தொழிற்சாலை சாத்தூர் அருகே தாயில்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த மத்தாப்பு தொழிற்சாலையில் கடந்த 1ஆம் தேதி மண்குண்டாம்பட்டியை சேர்ந்த நாகராஜ்(52) பணியாற்றி கொண்டிருந்த அறையில் உராய்வின் காரணமாக மத்தாப்பில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் நாகராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.