விநாயகர் சதுர்த்தி விழா: பூஜை பொருள்கள் விலை இருமடங்கு உயர்வு
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் விருதுநகரில் பூஜை பொருள்கள் வாங்குவதற்காக
விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் விருதுநகரில் பூஜை பொருள்கள் வாங்குவதற்காக பஜார், தேசபந்து மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது. ஆனால் பூஜை பொருள்களின் விலை கடந்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விருதுநகரில் பஜார், தேசபந்து மைதானம் முதலான பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், பூஜை பொருள்களின் விலையோ இரண்டு மடங்கு உயர்வாக விற்பனை செய்யப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்ட (கிலோ) மல்லிகை, தற்போது ரூ. 1,200 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பழங்கள் விலையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூஜை பொருள்கள் மட்டுமன்றி விநாயர் சிலைகளையும் வாங்கிச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.