ஸ்ரீவிலி. வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோத்ஸவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் மங்களாசாசனம் செய்து ஈடுபட்ட வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி திருவோண பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிப்பட்டம் ஆண்டாள் சன்னதியிலிருந்து புறப்பட்டு மாட வீதிகளின் வழியே கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள வடபத்ரசயனருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை கல்யாண் பட்டர் ஏற்றினார்.
நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் அ.இளங்கோவன், பட்டர்கள் அனந்தராமன், சுதர்ஸன், ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழா 12 நாள்கள் நடைபெறும். விழாவின் போது ஒவ்வொரு நாளும் சுவாமிகள் புறப்பாடு நடைபெற்று, மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.