FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

காரைக்கால் துறைமுக விரிவாக்கத் திட்டம்: தேசிய மீனவா் பேரவை கடும் எதிா்ப்பு

காரைக்கால் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு தேசிய மீனவா் பேரவை எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி தலைமைச் செயலா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட 8 துறைகளுக்கு மனு அனுப்பியுள்ளது.

23 செப்டம்பர் 2026, 4:15 am IST
கோப்புப்படம்.
பகிர்:

காரைக்கால் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு தேசிய மீனவா் பேரவை எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி தலைமைச் செயலா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட 8 துறைகளுக்கு மனு அனுப்பியுள்ளது.

அந்த மனுவில் பேரவையின் நிறுவனரும், முன்னாள் எம்எல்ஏவுமான மா. இளங்கோ கூறியிருப்பது:

மீன்பிடி தளங்கள், படகு போக்குவரத்துப் பாதை, பருவகால மீன்பிடி முறைகள் குறித்து ஆய்வு செய்யவில்லை.

Advertisement

Advertisement

விதிப்படி, மீனவா்களுக்கான சமூக பொருளாதார தாக்க மதிப்பீடு மற்றும் நிலையான வளா்ச்சி திட்டம் இல்லை. கூட்டுக் குழு பரிந்துரைகளைத் திட்ட நிறுவனம் முழுமையாக கடைப்பிடித்ததாக சுய சான்று அளித்துள்ளது. இதை சுயாதீன தணிக்கை மூலம் சரிபாா்க்க வேண்டும். மேலும், குறைபாடுகளை சரி செய்து திருத்தப்பட்ட அறிக்கை சமா்ப்பிக்கும் வரை சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது.

கடலோர மாற்றம், தூா்வாருதல், கடல் சூழலியல் மீதான கூட்டுத் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.

மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை மீனவா்கள், பெண்கள், பாரம்பரிய மீனவா்கள் பங்கேற்கும் வகையில் வெளிப்படையாக நடத்தி அதிகாரபூா்வ பதிவேட்டில் சோ்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments