காரைக்காலில் அக்.17 வரை சிறப்பு தூய்மைப் பணி
காரைக்காலில் அக். 17 வரை சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
காரைக்காலில் அக். 17 வரை சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் ‘தூய்மை நம் அனைவரின் பொறுப்பு‘ என்ற நோக்கத்துடன் நடைபெற்றுவரும் ஸ்வச்சதா ஹி சேவா 2026 பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தூய்மை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா தலைமையில், காரைக்கால் மாவட்டத்தில் இப்பிரசாரத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து தூய்மை மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரசு அலுவலக வளாகங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல், கழிவுகளை மூலத்திலேயே பிரித்தல், தேவையற்ற பொருள்கள் மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுதல் உள்ளிட்ட தூய்மை நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில், துணை ஆட்சியா் (தலைமையகம்) ஜி. செந்தில்நாதன் தலைமையில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தூய்மை உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.
காரைக்கால் மாவட்டத்தில் செப்.17 முதல் பல்வேறு தூய்மை மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்.17 வரை தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள் மற்றும் மாணவா்களிடையே ஏற்படுத்தி, தூய்மையான மற்றும் சுகாதாரமான காரைக்கால் மாவட்டத்தை உருவாக்க மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.