FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; புதுச்சூரங்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

சாத்தூர் பள்ளி மாணவ, மாணவிகளை தவறாக பேசிவரும் ஆசிரியரை கைது செய்யக்கோரி கிராம பொதுமக்கள் மாணவ,மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 25 ஜூலை 2022, 3:23 pm IST
சாத்தூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; புதுச்சூரங்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் கைது
பகிர்:

சாத்தூர்: புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைபள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிகளிடம் நடத்திய விசாரணையை அடுத்து ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம், பத்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்தப் பள்ளியில் 16க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பள்ளியில் சாத்தூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் தாமோதரன் மாணவிகளிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது.இதையடு்தது பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் திங்கிள்கிழமை பள்ளி முன்பு கூடி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் ஆசிரியர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில் பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா காவலர்கள், பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பின்னர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து ஆசிரியரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments