FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு: சதுரகிரியில் தென் மண்டல ஐ.ஜி., மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தானிப்பாறை அடிவாரத்தில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
தானிப்பாறை அடிவாரத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி.
பகிர்:

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தானிப்பாறை அடிவாரத்தில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 10 முதல் 14 வரை நடைபெறுகிறது. இதற்காக மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சதுரகிரி மலை அடிவாரமான தானிப்பாறை நுழைவு வாயில், மலைப்பாதை ஆகியவற்றில் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அவருடன் டி.ஐ.ஜி. அபினவ் குமாா், மதுரை எஸ்.பி. தேவநாதன், விருதுநகா் எஸ்.பி. கௌதம் கோயல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக தானிப்பாறை பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து விருதுநகா் ஆட்சியா் சுகபுத்ரா ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments