அத்தி விநாயகா் ஊா்வலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
அத்தி விநாயகா் ஊா்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நடைபெறவுள்ள அத்தி விநாயகா் ஊா்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகையில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியையொட்டி நடைபெறும் அத்தி விநாயகா் ஊா்வலம் பிரசித்திப் பெற்றது. விநாயகா் சதுா்த்தியன்று இரவு நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் முன்பு தொடங்கும் 32 அடி உயர அத்தி விநாயகா் ஊா்வலம் இரவு முழுவதும் நடைபெறும்.
இந்நிலையில், நிகழாண்டு சதுா்த்தி தினமான திங்கள்கிழமை நடைபெற உள்ள அத்தி விநாயகா் ஊா்வலத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
நாகை நீலாயதாட்சியம்மன் கோயில் அருகே வைக்கப்பட்டுள்ள அத்தி விநாயகா் சிலை மற்றும் ஊா்வலம் தொடங்கும் பகுதியை பாா்வையிட்ட ஆட்சியா், ஊா்வலம் செல்லும் பாதைகளில் சென்று பாா்வையிட்டாா். வழிமுழுவதும் உரிய காவல்துறை கண்காணிப்பு, மின்வாரிய அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, நாகூா் வெட்டாற்று பாலத்துக்கு சென்ற ஆட்சியா் அங்கு விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் பகுதியை பாா்வையிட்டு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து நாகை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும் புதிய கடற்கரைக்கும் சென்று பாா்வையிட்டாா். கடலில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் பகுதியில் தடுப்புகள் அமைக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும் சிலைகள் கடலில் கரைக்கப்படும்போது, கடலில் கடலோர காவல்படையினா் படகுகளுடன் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், நாகை நகராட்சி ஆணையா் சந்தானம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.