திலக் வர்மா 99 ரன்கள்: தென் மண்டலம் 336 ரன்களுக்கு ஆல் அவுட்!
துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் தென் மண்டல அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் குறித்து...
துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் தென் மண்டல அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பி 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சென்னையில் சேப்பாக்கம் திடலில் செப்.6ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 163 ஓவர்களில் 708 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் இஷான் கிஷன் 270 ரன்கள் குவித்தார். தென் மண்டலம் சார்பில் திரிபுரானா விஜய் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய இந்த அணி 107.3 ஓவர்களில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
இதில் தென் மண்டல அணியின் கேப்டன் தில்க் வர்மா தனியாளாகப் போராடி வந்து, சதம் அடிப்பாரென எதிர்பார்த்த நிலையில் 99 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி விக்கெட்டாகவும் அவரே ஆட்டமிழந்தார்.
கிழக்கு மண்டலம் சார்பில் முகேஷ் குமார் 3, ஷமி, ஷிகர் மோகன், குரேஷி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். தற்போது, மதிய உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
ஃபாலோ ஆன் ஆனதால், மீண்டும் தென் மண்டல அணி பேட்டிங் செய்ய வாய்ப்பிருக்கிறது. கிழக்கு மண்டல அணி வெற்றி பெறும் அல்லது சமனில் முடிய மட்டுமே வாய்ப்பிருக்கிறது. இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டனாக இருக்கிறார்.
Tilak Varma 99: South Zone all out for 336 runs in Duleep Trophy Finals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.