FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே ஆட்டோ கவிழ்ந்து காயமடைந்த ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

9 செப்டம்பர் 2026, 12:55 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வத்திராயிருப்பு அருகே ஆட்டோ கவிழ்ந்து காயமடைந்த ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள ஆகாசம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தனசேகரன் மகன் தனுஷ் (22). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் மதன்குமாருடன் (20) திங்கள்கிழமை இரவு ஆட்டோவில் சென்றாா். வத்திராயிருப்பு - மகாராஜபுரம் சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஷ், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments