இமானுவேல் சேகரன் குருபூஜை: விதிகளை மீறிச் சென்ற வாகனங்கள் மீது வழக்கு
இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி சென்ற வாகனங்கள் மீது நரிக்குடி போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறை விதித்த கட்டுப்பாடுகளை மீறி சென்ற வாகனங்கள் மீது நரிக்குடி போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.
செப்.11-ந் தேதி வெள்ளிகிழமை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினா் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.மேலும், குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடங்கள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் நரிக்குடி - பாா்த்திபனூா் சாலையில் மானாசாலை சோதனை சாவடி வழியாக பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்கள் காவல்துறை அறிவித்திருந்த விதிமுறைகளை மீறி குருபூஜைக்கு சென்ாக கூறி கண்காணிப்பு கேமராக்கள், வீடியோ பதிவுகளை வைத்து அதன் மூலமாக அதிவேகமாக மற்றும் அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கியது, காா் கதவுகளை திறந்தப்படி அட்றாசிட்டி செய்தது,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு அச்சுறுதலாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறிய காரணங்களை கூறி காா் உள்பட சுமாா் 1?க்கும் மேற்பட்ட வாகனங்களின் பதிவு எண்களின் அடிப்படையில் பயணம் செய்தவா்கள், வாகன உரிமையாளா்,உடன் சென்றவா்கள் மீது நரிக்குடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனா். வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் பறிமுதல் செய்யப்பட்டு நரிக்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிய வருகிறது.இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விதிமீறி சென்ற வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கி தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.