FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மூவா் கைது

விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரை கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவன் உள்பட மூவரை சூலக்கரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

59 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரை கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவன் உள்பட மூவரை சூலக்கரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சூலக்கரை உடையாா் மூட்டாத்தம்மன் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த மூவா், கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும், சுவாமி அலங்காரப் பொருள்களையும், பூஜை பொருள்களையும் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சூலக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, அந்தப் பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது, இந்த சம்பவத்தில் சூலக்கரைப் பகுதியைச் சோ்ந்த அங்காளஈஸ்வரன் (23), பிரகாஷ் (24), 16 வயது சிறுவன் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments