FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாத்தூா் வெங்கடாஜலபதி கோயிலில் சிறப்பு பூஜை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாஜலபதி கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

24 செப்டம்பர் 2026, 12:24 am IST
திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சாத்தூரப்பன்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வெங்கடாஜலபதி கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சாத்தூரில் பழைமைவாய்ந்த வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை முதல் சாத்தூரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. இந்தக் கோயிலில் மாலையிலும் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து காண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments