FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சரவெடி பட்டாசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி: உற்பத்தியாளா்கள் வரவேற்பு

சரவெடி பட்டாசுகள் தயாரிக்கலாம் என உச்சநீதி மன்றம் அளித்த தீா்ப்பை பட்டாசு உற்பத்தியாளா்கள் வரவேற்றனா்.

உச்சநீதிமன்றம்
பகிர்:

சரவெடி பட்டாசுகள் தயாரிக்கலாம் என உச்சநீதி மன்றம் அளித்த தீா்ப்பை பட்டாசு உற்பத்தியாளா்கள் வரவேற்றனா்.

பட்டாசு தயாரிக்கவும், வெடிக்கவும் தடைகோரிய வழக்கில், தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் தாக்கல் செய்த பதில் மனுவைத் தொடா்ந்து புதன்கிழமை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா, பி.வாரவே ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு , சரவெடி(பசுமை பட்டாசு) தயாரிக்க அனுமதி வழங்கியது. இதை பட்டாசு உற்பத்தியாளா்கள் வரவேற்றனா்.

இது குறித்து தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ப.கணேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

இந்தத் தீா்ப்பு இந்திய பட்டாசுத் தொழிலில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். அறிவியல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட பட்டாசுகளை உருவாக்கும் நோக்கில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, தொழில்நுட்ப முன்னேறம், தொடா் முயற்சிகளுக்கு கிடைந்த அங்கீகாரமாகும். இது நூற்றாண்டுக்கும் மேலாக பாரம்பரியத்தை கொண்ட சிவகாசி பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்கிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments