FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கட்செவி, முகநூலில் கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர்

கட்செவி அஞ்சலி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து காவலர் பயிற்சியை சிறப்பாக

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கட்செவி அஞ்சலி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து காவலர் பயிற்சியை சிறப்பாக பயன்படுத்தி வெற்ற பெற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன். 
புதுச்சேரி மாநிலத்தில் காவல் துறையில் காவலர்கள் தேர்வு நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சியை காரைக்காலில் புதன்கிழமை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: 
காவலர் பயிற்சி வகுப்பு திருப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, பூவம் காமராஜர் அரசுப் பள்ளியிலும், உடற் தகுதிக்கு திருநள்ளாறு புறவழிச் சாலை அருகே உள்ள மைதானம், காரைக்கால் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர 350 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். 175 பேர் வீதம் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லூரி மற்றும் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும். வெள்ளிக்கிழமை (செப்.14) பயிற்சி தொடங்கும். 
பயிற்சி அளிக்க சிறந்த ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் வரை அளிக்கப்படும் இப்பயிற்சியில் காரைக்கால் இளைஞர்கள் சேர்ந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. காரைக்கால் ஸ்டெடி சர்கிள் என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சிறந்த கல்வியாளர்கள், உடற் பயிற்சி ஆசிரியர்கள் இதில் பங்கு கொண்டுள்ளனர். இதையும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தவும், தேர்வுக் காலம் முடியும் வரை கட்செவி அஞ்சல், முகநூல் போன்றவற்றில் செலுத்தும் கவனத்தை குறைத்து பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்வில் வெற்றிபெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் ஆட்சியர்.
இப்பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பாலு என்கிற பக்கிரிசாமி, தேர்தல் துறையை சேர்ந்த மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டி. சந்தனசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments