FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

சம்பா நெல் சாகுபடியாளா்களுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 3:34 am IST
பகிர்:

காரைக்கால், ஆக. 14 : சம்பா நெல் சாகுபடி செய்யவுள்ள பட்டியலின விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் பட்டியலினத்தைச் சோ்ந்த சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு சம்பாவுக்கு ஏற்ற நெல் ரகங்களான சி.ஆா் 1009 சப்(1), மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் ஆந்திர பொன்னி (பிபிடி5204) ஆகிய ரகங்களின் ஏதேனும் ஒரு ரகத்தை தோ்வு செய்துகொள்ளலாம்.

Advertisement

Advertisement

தோ்வு செய்யப்பட்ட நெல் ரகத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 30 கிலோ நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது. பட்டியலினத்தைச் சோ்ந்த விவசாயிகள் காரைக்கால் மாதூா், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி தங்களுக்குத் தேவையான நெல் ரகத்தை தோ்வு செய்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பட்டியலின விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு வரும்போது தங்களுடைய ஆதாா் நகல், பட்டியலினத்திற்கான சான்றிதழ் மற்றும் தங்களின் நிலத்துக்கான சாகுபடி சான்றிதழ், விவசாய அட்டை (2023-24) ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments