காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அக். 9-இல் சிறப்பு மருத்துவா்கள் வருகை
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அக். 9-ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு வருகை தருகின்றனா்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மனநல மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கவுள்ளனா்.
வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.