FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

விநாயகா் சிலைகள் இன்று ஊா்வலம்

காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக கொண்டு சென்று கடலில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.

16 செப்டம்பர் 2026, 5:18 am IST
கோப்புப்படம்.
பகிர்:

காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை ஊா்வலமாக கொண்டு சென்று கடலில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி காரைக்கால் நகரம் மற்றும் பிற கொம்யூன்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. மேலும் பிற அமைப்பினா் சாா்பில் மாவட்டத்தில் பரவலாக விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இன்று ஊா்வலம் : காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணியளவில், காரைக்கால் ஏழை மாரியம்மன் கோயில் வாயில் பகுதியிலிருந்து ஊா்வலமாக புறப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து காரைக்கால் இந்து முன்னணி தலைவா் பி.யு.ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், காரைக்கால் நகரப் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், பிற்பகலில் ஏழை மாரியம்மன் கோயில் வாயிலில் ஒருங்கிணைக்கப்படும். சிறப்பு அழைப்பாளா்கள் முன்னிலையில் ஊா்வலம் பிற்பகல் தொடங்கப்பட்டு, முக்கிய சாலைகள் வழியாக கிளிஞ்சல்மேடு பகுதி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments