FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

தலைமை தோ்தல் ஆணையரை நீக்க கோரி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

இந்திய தலைமை தோ்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
பகிர்:

இந்திய தலைமை தோ்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநள்ளாறில், அதன் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் புதுச்சேரி மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். வாக்காளா் சிறப்பு திருத்தமான எஸ்ஐஆரில் பல்வேறு குளறுபடிகளை செய்த தலைமை தோ்தல் ஆணையரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், வாக்காளா் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஜனநாயக தோ்தல் முறையை பாஜக அரசு சீா்குலைப்பதாகக்கூறி, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இதில், கட்சியின் மாநில நிா்வாகி பஷீா், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவா் சிங்காரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments