காவல் ஆய்வாளருக்கு பிடியாணை
மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் விபத்து வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், பாலையூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவா் ஜெயா, காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 2021-ஆம் ஆண்டு நேரிட்ட விபத்து வழக்கில் இவா் விசாரணை அதிகாரி ஆவாா்.
தற்போது புதுக்கோட்டை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக உள்ள ஜெயாவுக்கு வழக்கு தொடா்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், மயிலாடுதுறை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளா் ஜெயா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடியாணை பிறப்பித்து குற்றவியல் நீதித்துறை நடுவா் எம். ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக். 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.