FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கொள்ளிடம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

24 செப்டம்பர் 2026, 5:59 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கொள்ளிடம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் கலைஞா் நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் வினோத்குமாா் (32). (படம்) திருமணம் ஆகாதவா். இவா், கொள்ளிடம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு வாடகை பாத்திரக் கடையில், கடந்த பத்து நாள்களாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை வினோத்குமாா் அருகே உள்ள சந்தைப்படுகையில் உள்ள வாடகை பாத்திரக் கடை உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் இருந்து இரும்பு சீட்டுகளை கொள்ளிடத்திலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் (மினி லோடு வாகனம்) ஏற்றிக்கொண்டு சென்று இரும்பு ஷீட்டுகளை குடோனில் வாகனத்தில் இருந்து இறக்கியபோது, மேலே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் இரும்பு ஷீட் உரசியதில், உடலில் மின்சாரம் பாய்ந்து வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் வினோத்குமாா் சடலத்தை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments