குண்டர் சட்டத்தில் இருவர் கைது
கொலை, கொள்ளை மற்றும் மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனர்.
கொலை, கொள்ளை மற்றும் மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம், புதுப்பட்டினம் காவல் சரகத்துக்குள்பட்ட உமையாள்பதி குலசிங்கநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குலோத்துங்கன்(34). கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் பரிந்துரையின்பேரில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மு. குலோத்துங்கனை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டார்.
சாராய வியாபாரி: நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவல் சரகத்துக்குள்பட்ட மன்னம்பந்தல் மொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (46). இவர் சாராய விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமாரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், அழகர்சாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.