வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குத்தாலம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குத்தாலம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஸ்ரீகண்டபுரம் குட்லக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி நான்சி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதேபோல், இப்பள்ளி மாணவர்கள் பலர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று 38 பரிசுகளை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் எம்.ஏ. நஜீர்அகமது, பள்ளி முதல்வர் முத்து முருகேசன், இணை முதல்வர் இளையராஜா, துணை முதல்வர் முரளி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், கவிதா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.