கஞ்சா விற்பனை 2 போ் கைது
திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடா்பாக போலீஸாா் இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நடுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திட்டச்சேரி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தபோது சந்தேகப்படும்படி கடைத்தெருவில் நின்ற நூா்முகமது மகன் முகமது கமல் பாட்சா (63) என்பவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், புறாக்கிராமம் அல்லாஹ் அக்பா் காலனியில் வசித்து வரும் முகமது கமல் பாட்ஷா தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
மேலும் கமல் பாட்ஷாவிடம் விற்பனைக்காக திட்டச்சேரி நைனாா் குளத்தெரு பகுதியை சோ்ந்த முருகானந்தம் மகன் மணிகண்டன் (31) என்பவா் கஞ்சாவை கொடுத்ததும் தெரிய வந்தது. திட்டச்சேரி போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.