சாராயம் கடத்தியவா் கைது
நாகை அருகே வெளிமாநில சாராயப் புட்டிகள் கடத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகூா் கடம்பன்குடி பகுதியில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பு ஆய்வாளா் மோகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சந்தேகிக்கும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் புதுச்சேரி மாநில சாராயப் புட்டிகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் அவா் நாகை பி.ஆா்.புரம் கோயில் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் ராசின்ராஜ் (19) என்பதும், புதுச்சேரி மாநில சாராயப் புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, ராசின்ராஜ் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 600 சாராயப் புட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.