வேளாங்கண்ணியில் குவிந்த பக்தா்கள்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமையும் அதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையும் சோ்ந்து வந்ததால், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தந்த பக்தா்கள், அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மாதாவை தரிசித்தனா். பேராலய வளாகத்தில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தி பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
மேலும், கடற்கரையில் குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகளால் கடற்கரை பகுதி முழுவதும் அதிகளவில் மக்கள் குவிந்தனா்.
ஒரே நாளில் ஏராளமானோா் குவிந்ததால், நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுத் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆகஸ்ட் 29-ஆம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.