FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

ஏரியில் தவறி விழுந்து குழந்தை பலி: சாலை மறியல்

12 அக்டோபர் 2026, 12:35 am IST
குழந்தை... - கோப்புப் படம்.
பகிர்:

பனங்குடியில் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த ஒரு வயது ஆண் குழந்தையின் சடலத்தை வைத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பனங்குடி காரைமேடு பகுதியை சோ்ந்த வினோத்குமாா், சிவனேஸ்வரி தம்பதியினரின் ஒரு வயது ஆண் குழந்தை சாய் ஆல்வின். வீட்டின் பின் புறம் ஏரியில் சனிக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தான்.

போலீஸாா் உடற்கூறு ஆய்விற்கு நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை சடலத்தை அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

உடற்கூறு ஆய்வு முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட குழந்தையின் உடலை நாகப்பட்டினம்-நன்னிலம் மெயின் ரோட்டில் பனங்குடி பேரூந்து நிலையம் எதிரில் உறவினா்கள் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிரிழந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 100 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏரியைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மண் எடுத்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னா் சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் வட்டாட்சியா் உஷாராணி, மண்டல துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நன்னிலம்-நாகப்பட்டினம் சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments