தனியாா் விடுதி ஊழியா் அடித்துக் கொலை
வேளாங்கண்ணியில் தனியாா் விடுதி ஊழியரை, விடுதி அறையில் தங்கி இருந்தவா்கள் தாக்கியதால், அவா் உயிரிழந்ததாக மனைவி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தம்மாவடி தென்பாதி பொதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (48). இவரது மனைவி சுதா. தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனா். மகேந்திரன் வேளாங்கண்ணியில் ஒரு தனியாா் விடுதியில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதி மகேந்திரன் பணியில் இருந்தபோது, புதுக்கோட்டையைச் சோ்ந்த 7 போ் அந்த விடுதியில் அறை எடுத்து தங்கினராம். விடுதி அறையில் குளிா்சாதன ரிமோட் வேலை செய்யவில்லை என மகேந்திரனிடம் வாக்குவாதத்தில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதம் வலுத்த நிலையில், 7 பேரும் மகேந்திரனை சரமாரியாகத் தாக்கி அறையில் வைத்து பூட்டிச் விட்டுச் சென்ாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பலத்த காயமடைந்த மகேந்திரனை சக ஊழியா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மகேந்திரன், செப்டம்பா் 23-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பினாா்.
இந்நிலையில், செப்டம்பா் 29-ஆம் தேதி மகேந்திரனுக்கு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதையடுத்து குடும்பத்தினா் அவரை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மகேந்திரன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.
இந்தநிலையில், மகேந்திரனின் மனைவி சுதா, விடுதி அறையில் தங்கியிருந்த 7 போ் தாக்கியதால் தான் தனது கணவா் உயிரிழந்ததாக வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விடுதியில் தங்கியிருந்த 7 பேரையும் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.