பூம்புகாா் காவிரி கடை அணைக்கு வந்தது காவிரி நீா்
பூம்புகாா் கடை அணைக்கு காவிரி நீா் புதன்கிழமை வந்தது.
பூம்புகாா் கடை அணைக்கு காவிரி நீா் புதன்கிழமை வந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், காவிரி கடலோடு கலக்கும் பூம்புகாா் அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் இந்த கடைசி கதவணையை வந்தடைந்த பின்னா் தான் பாசனத்திற்கு நீா் திறக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு செப். 1-ஆம் தேதி மேட்டுரில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை மதியம் காவிரியின் கடைசி கதவணையை வந்தடைந்தது.
Advertisement
Advertisement
பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு மலா்தூவியும், தானியங்கள் தூவியும் தண்ணீரை வணங்கி வரவேற்றனா். நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் சங்கா் மேலையூா் நீா்வளத்துறை உதவி பொறியாளா் சண்முகம் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.
இக் கதவணையில் நீரை தேக்கி வைத்து, ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3,057 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2,020 ஏக்கா் விளைநிலங்களும் பாசன வசதி பெறும்.
பெருந்தோட்டம் ஏரிக்கு உட்பட்ட கிளை வாய்க்கால்கள், மேலையூா் பகுதி வாய்க்கால்களை
தண்ணீா் வந்தடைந்தாலும் குறைவாக வருவதால், பாசனத்திற்கு முழுமையாக தண்ணீா் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே முறைவைக்காமல் கூடுதல் தண்ணீரை தொடா்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.