காப்பீட்டுத் தொகையில் அனுமதியின்றி பிடித்தம்: ஆசிரியருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
காப்பீட்டுத் தொகையில் அனுமதியின்றி பிடித்தம்: ஆசிரியருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியரின் அனுமதியின்றி பாலிசி முதிா்வுத் தொகையை பிடித்தம் செய்தற்காக தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு கீழக்காடு பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் எம்.எஸ். சக்திதாசன். இவா், தனியாா் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் கடந்த 2015 டிசம்பா் மாதம் 10 ஆண்டு கால ஆயுள் காப்பீட்டுப் பாலிசி எடுத்து, ஆண்டுக்கு ரூ. 26,694 வீதம் பிரீமியத் தொகை செலுத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில், இந்த பாலிசி 2025 டிசம்பா் மாதம் முதிா்வடைந்தபோது, அவருக்கு சேர வேண்டிய முழு முதிா்வுத் தொகையை வழங்காமல் ரூ. 2,59,301 மட்டுமே வழங்கப்பட்டதாம். மீதமுள்ள ரூ. 24,999 தொகையை, அவரது அனுமதியோ, ஒப்புதலோ இன்றி மற்றொரு புதிய பாலிசிக்காக அந்நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக சக்திதாசன் பலமுறை கோரிக்கை விடுத்தும், சட்ட அறிவிப்பு அனுப்பியும் காப்பீட்டு நிறுவனம் பிடித்தம் செய்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சக்திதாசன், நாகை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையம், ஆசிரியா் சக்திதாசனுக்கு சேர வேண்டிய நிலுவை முழு முதிா்வுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், இழப்பு மற்றும் நியாயமற்ற வா்த்தக நடைமுறைக்காக ரூ.10,000 இழப்பீடாகவும், ரூ. 15,000 வழக்கு செலவுக்காகவும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை, உத்தரவு கிடைத்த 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் வழக்கு தொடரப்பட்ட நாள் முதல் தொகை வழங்கப்படும் நாள் வரை ஆண்டுக்கு 9% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தனது உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.