FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

20 செப்டம்பர் 2026, 11:47 pm IST
உயிரிழப்பு... - பிரதிப் படம்
பகிர்:

நாகூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகூா் அருகே உள்ள வெங்கடகால் பிரான்குடியைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் (20). இவா், வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கடைக்குச் சென்றாா். நாகூா் பிரதான வீதியில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் சூரிய பிரகாசின் வாகனம் மீது மோதியது.

இதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த களஞ்சியம் (48), பிரபாகரன் (40), கண்ணன் (58) மற்றும் சூரிய பிரகாஷ் ஆகிய நால்வரும் காயமடைந்தனா். அப்பகுதியினா் நால்வரையும் மீட்டு ஒரத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சூரிய பிரகாஷ் ஞாயிற்றுகிழமை உயிரிழந்தாா். நாகூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments