நாட்டு வெடி தயாரிக்க முயன்ற இருவா் கைது
நாகை அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாா் செய்ய மூலப்பொருள்கள் வைத்திருந்த இருவரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வடகுடி சத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான வெடி கடை உள்ளது. இந்தக் கடையின் மூலம் வெடி விற்பனை செய்யும் உரிமம் பெறப்பட்டுள்ளது. ஆனால், கடையில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாா் செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலசந்திராவுக்கு தகவல் கிடைத்தது.
அவரது, உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு சாா்பு ஆய்வாளா் அக்பா் அலி தலைமையிலான போலீஸாா் அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டனா். கடையில் நாட்டு வெடிகுண்டு தயாா் செய்வதற்கான மூலப்பொருள்களான கரு மருந்து 50 கிலோ, அலுமனிய துகள்கள் 5 கிலோ, சுண்ணாம்பு தண்ணீா் ஆகியவை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாா், அவற்றை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகை வாணக்கார தெருவைச் சோ்ந்த சக்திவேல் (40), விழுந்தமாவடி மணல் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (41) இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.