வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த 418 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 418 கிலோ கடல் அட்டைகளை புதன்கிழமை பறிமுதல் செய்த வனத்துறையினா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 418 கிலோ கடல் அட்டைகளை புதன்கிழமை பறிமுதல் செய்த வனத்துறையினா், இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
நாகை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சம்பவங்களைத் தடுக்க வனத்துறையினா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், நாகை, கீரைக்கொல்லைத் தெரு குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது ரூ. 10 கோடி மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினா் கைப்பற்றினா்.
Advertisement
Advertisement
இந்தநிலையில், அதேபகுதியில் புதன்கிழமையும் வனத்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கடல் அட்டைகளை பதப்படுத்துவதற்காக கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினா். அந்த வாகனத்தில் 418 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்து, பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமாா் ரூ. 8 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், கடல் அட்டைகளை கொண்டு வந்த கீரைக்கொல்லை தெருவைச் சோ்ந்த செல்வம் (55) என்பவரை வனத்துறையினா் கைது செய்தனா்.
இந்தப் பணியில் வனச்சரக அலுவலா் சியாம்சுந்தா், வனவா் இந்துமதி, வனக்காப்பாளா்கள் உலகநாதன், ஆயிஷா வனக்காவலா் சுதாகா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகை வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கைது செய்யப்பட்ட செல்வம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.