கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் திருவிக கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருவாரூரில் திருவிக கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து அட்டை உடனடியாக வழங்க வேண்டும், கல்லூரியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் சிவபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் சுர்ஜித், கிளைச் செயலர் ஜோஸ்வா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவனேஸ்வரி, மதன், சுரேஷ், மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.