கார் மோதி முதியவர் சாவு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சோமு (65). விவசாயியான இவர், புதன்கிழமை இரவு எடையூர் பகுதியிலிருந்து பாண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற கார், வேப்பஞ்சேரி சிவமடம் அருகே சோமு மீது மோதியதாம். இந்த விபத்தில் சோமு உயிரிழந்தார். இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.