FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று தரவரிசையில்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்று தரவரிசையில் இடம் பிடித்த மாணவிகளுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி செயலர் மிஸ்கின் தலைமை வகித்தார். கல்லூரி அறங்காவலர் குழு உறுப்பினர் முனவர்தீன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பல்கலைக்கழக அளவில் ஒரு மாணவி தங்கப் பதக்கமும், 4 பேர் முதல் தரமும் என தரவரிசையில் இடம் பெற்ற 60 மாணவிகளுக்கு பரிசுகளும், டிஎம்எல்டி மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
பேராசிரியர்கள் ஜி.டி. விஜயலெட்சுமி, எஸ். ரசூல்பேகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி வரவேற்றார். பேராசிரியர் கே. சர்மிளா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments