FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவாரூர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவாரூர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத அமாவாசையை அடுத்த சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்நாளில், பிள்ளையார் சிலைகளுக்கு எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் அவருக்கு படைக்கப்படும். மேலும், வாழை, நாவல், விளாம்பழம் உள்ளிட்டவையும் படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருவாரூரில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகருக்கு வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments