கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அமைந்துள்ள டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அமைந்துள்ள டெல்டா பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டெல்டா பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாறுவேடப் போட்டி நிகழ்விற்கு, மன்ப உல் உலா மேல் நிலைப் பள்ளி தாளாளர் திமுஜீதீன் தலைமை வகித்தார். முதல்வர் ஜோஸ்பின் முன்னிலை வகித்தார். ஆசிரியர் எம்.வைஷ்ணவி வரவேற்றார். மாறுவேடப் போட்டி விழாவுக்கு, இந்தியன் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் ஜெ.முஹம்மது அபிபுல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்வில், குழந்தைகள் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பாரதியார், பகத்சிங், வேலுநாச்சியார், கண்ணகி, குந்தவை நாச்சியார், ராஜராஜ சோழன், ஒளவையார், மருத்துவர், காவலர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமிட்டு, அவர்களைப் பற்றி பேசினர்.
Advertisement
Advertisement
26 குழந்தைகளுக்கும் மேலான வேடமிட்டவர்களில் குந்தவை நாச்சியார் வேடமிட்ட சிறுமி சிறப்பாக பேசினார். துணை முதல்வர் சுருளி நாதன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.