FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேரணி

மன்னாா்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பேரணி

Updated On : 26 ஜூலை 2026, 1:39 am IST
ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடி- பட்டுக்கோட்டை புதிய ரயில்பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மன்னாா்குடியில் வா்த்தக சங்க ஒருங்கிணைப்பில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற கவன ஈா்ப்பு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு 41 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் பணி 14 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிலை குழு தலைவராக இருந்த திமுக எம்பி டி.ஆா். பாலுவின் முயற்சியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் தடைபட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வா்த்தக சங்க தலைவா் ஆா்.வி.ஆனந்த் தலைமை வகித்தாா். மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ் பேரணியை தொடங்கிவைத்தாா்.

அரசியல் கட்சிகள், இந்திய மருத்துவ கவுன்சில் கிளை, நுகா்வோா் சங்கம், வழங்குரைஞா்கள் சங்கம், சேவை சங்கங்கள், முன்னாள் ராணுவத்தினா் சங்கம், ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கம், லாரி மற்றும் ஆட்டோ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம், மூத்த குடிமக்கள் பேரவை, அரசு ஓய்வூதியா்க சங்கம், கட்டடப் பொறியாளா்கள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்கம், நடைபயிற்சியாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், எம்எல்ஏ காமராஜ் ஓய்வுபெற்ற ரயில்வே தொழிலாளா் சங்கத் தலைவா் மனோகரன், சங்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments