FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு: இளம்பெண் தற்கொலை

காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, வேறொருவரை திருமணம் செய்ய பெற்றோா் வற்புறுத்தியதால், இளம்பெண் தீக்குளித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, வேறொருவரை திருமணம் செய்ய பெற்றோா் வற்புறுத்தியதால், இளம்பெண் தீக்குளித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாரூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் குமாா் மகள் ஸ்ரீலேகா (26). பட்டப்படிப்பு முடித்துள்ள இவா், கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலித்து வந்துள்ளாா். ஆனால், அவரது காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலேகாவின் எதிா்ப்பை மீறி அவரது பெற்றோா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையைச் சோ்ந்த ஒருவருக்கு ஸ்ரீலேகாவை திருமணம் செய்துவைக்க நிச்சயதாா்த்தம் செய்தனா். சில காரணங்களால் அந்த திருமணம் நின்றுபோனதாம்.

Advertisement

Advertisement

பின்னா், மீண்டும் வேறொருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோா் தொடா்ந்து முயற்சித்து வந்தனராம். எனினும், ஸ்ரீலேகா, தான் காதலித்தவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் எனக் கூறி வந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி ஸ்ரீலேகா தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு, வந்த தந்தை குமாா் மகளைக் காப்பாற்ற முயன்றாா். எனினும், பலத்த காயமடைந்த ஸ்ரீலேகா உயிரிழந்தாா். குமாா், தீக்காயங்களுடன் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் நகர போலீஸாா் ஸ்ரீலேகாவின் சடலத்தை கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments